×

கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரிகிறது பயங்கர காட்டுத்தீ-அரியவகை மரங்கள் கருகி நாசம்

கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே, மச்சூர் வனப்பகுதியில் தொடரும் பயங்கர காட்டுத்தீயால், அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகின. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, பெருமாள்மலை பகுதியில் தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் என 500 ஏக்கர் வனப்பகுதி உள்ளது. மச்சூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பற்றிய காட்டுத்தீ, நேற்று அதிகாலை மயிலாடும்பாறை, தோகைவரை, குருசடி உள்ளிட்ட பல வனப்பகுதிகளுக்கும் பரவி பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, காற்று மாசுபாடு அடைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், நள்ளிரவு முதல் தீத்தடுப்பு எல்லைகள் அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்பு அமைத்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. பூச்சியினங்கள், ஊர்வன, விலங்குகள் என பல்வேறு உயிரினங்கள் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடைகாலங்களில் வனப்பகுதியில் பற்றும் இந்த காட்டுத்தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும் வனத்துறையினர் தற்காலிக பணியாளர்கள் மூலமாக காட்டுத் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றுவதை தடுக்க, நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரிகிறது பயங்கர காட்டுத்தீ-அரியவகை மரங்கள் கருகி நாசம் appeared first on Dinakaran.

Tags : Machur wilderness ,Kodhikanal ,Kodaikanal ,Maschur forest ,Machur ,Kodicanal ,Karagi Nasam ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து